தகவல்கள் எப்படி வெளிக்கசிகிறன - புலனாய்வுத் துறைக்குள் உச்சகட்ட மோதல்


பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து சாட்சியமளித்த பாதுகாப்புத்துறையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் மற்றவர்களை காட்டிக் கொடுத்துவிட்டதாக – அரச புலனாய்வுத்துறையின் உயர்மட்ட தரப்புக்களுக்கிடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து எதுவும் தெரியாதென – ஏற்கனவே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த பாதுகாப்புத் துறையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ,தாம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுத்ததாக பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் கூறியிருப்பதே இந்த சர்ச்சைக்கு காரணமாகும். அங்கும் இங்கும் பரஸ்பர வாக்குமூலம் அவர் அளித்துள்ளதால் அரச புலனாய்வுத்துறைக்குள் இந்த முறுகல் உருவாகியுள்ளது

இதனால் அடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையில் சாட்சியமளிக்கும் அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இதுவரை வெளிவராத உண்மைகளை வெளியிட தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது..அதன் காரணமாக அரச புலனாய்வுத்துறையின் உயர்மட்டத்தில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவின் சாட்சியங்கள் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் அரச புலனாய்வுத்துறையின் தகவல்கள் வெளியில் செல்வதாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது

No comments