யுவதி ஒருவரை பெற்றோல் ஊற்றிக் கொழுத்தியவருக்கு விளக்கமறியல்

பொலன்னறுவை - புலஸ்திபுர பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடை தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்த மேற்படி யுவதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் கடந்த 12ம் திகதி யுவதியினது என சந்தேகிக்கப்படும் எரியூட்டப்பட்ட உடற்பாகங்கள் பொலன்னறுவை - லக்‌ஷ உயன பிரதேசத்தின் வயலொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டன.

அதன்படி , மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த அவரது காதலன் என கூறப்படும் திருமணமான நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் , அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்படி யுவதியை கொலை செய்து பெற்றோல் ஊற்றி எரித்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக பொலன்னறுவை காவற்துறையினர் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு ஏற்பட்டு சில மாதங்களில் தனது காதலன் திருமணமான ஒரு குழுந்தையின் தந்தையென குறித்த யுவதிக்கு தெரியவந்துள்ளதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments