எந்த லெவலுக்கும் போவோம் - வன்முறை எச்சரிக்கை

வன்முறைகளைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் அதிகபட்ச அதிகாரத்தை இராணுவம் பயன்படுத்தும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எச்சரித்துள்ளார்.

”சில இடங்களில் இளைஞர்கள் சொத்துக்களை அழித்து வருகின்றனர்.  இததகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த சிறிலங்கா இராணுவத்துக்கு அரசாங்கத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கையில் இறங்குவோம். கைது செய்வது மாத்திரமன்றி, துப்பாக்கிச் சூடும் நடத்துவோம். அவசரகாலச்சட்ட விதிகளின்படி குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவோம்.

நாடு மீண்டும் வன்முறைக்குத் திரும்புவதை அனுமதிக்க முடியாது. எனவே இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையேல், அவர்களின் மீது கடற்படை, விமானப்படை, காவல்துறையுடன் இணைந்து அதிகபட்ச அதிகாரங்களைப் பயன்படுத்த இராணுவம் தயாராக இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments