Header Shelvazug

http://shelvazug.com/

பௌத்த மடத்திற்கு காணியைத் தாரைவார்த்த வவுனியா பிரதேச செயலகம்!

தனது காணி­யில் தனது அனு­மதி இல்­லா­மல் பௌத்த மடம் அமைக்கப்பட்­டுள்­ளது என்று குற்றஞ்சாட்­டி­யுள்ள பெண் ஒரு­வர் தனது காணி­யைத் தனக்கு மீளத் தர வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவு­னியா, கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்­பட்­டுள்­ளது. அந்த விகா­ரை­யின் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில், விகா­ரை­யைப் பராமரிக்கும் பிக்கு மற்­றும் சிலர் தங்கு­வ­தற்கு இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள பெண் ஒரு­வர் அந்தக் காணி­க­ளுக்கு உரிமை கோரு­கின்­றார். அந்த இரு விடு­தி­கள்
அமைக்­கப்­பட்­டுள்ள 3 ஏக்­கர் காணி தனக்­குச் சொந்­த­மா­னது என்­றும், அந்­தக் காணி­யைத் துப்புரவாக்­கச் சென்­ற­போது அரு­கில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தடை­களை ஏற்படத்துகின்­ற­னர் என்­றும் அந்­தப் பெண் கூறு­கின்­றார்.

போரால் இடம்­பெ­யர்ந்து 2006ஆம் ஆண்டு குடும்­பத்­து­டன் இந்­தி­யா­வுக்­குச் சென்­றேன். 2017ஆம் ஆண்டு நான் மீண்­டும் நாடு திரும்­பி­னேன். எனது காணி­யைப் பார்க்­கச் சென்­ற­போது அங்கு இரு கட்­ட­டங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. நான் எனது காணி­யைத் துப்­பு­ர­வாக்க முயன்றேன். காணிக்கு அரு­கில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் அதற்­குத் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். அச்சுறுத்தும் வகை­யில் செயற்­ப­டு­கின்­ற­னர். தற்­போது எனக்கு வீட்­டுத் திட்­டம் கிடைத்­துள்­ளது. காணிப் பிரச்­சி­னை­யால் வீட்டை அமைக்க முடி­யா­துள்­ளது.

எனது காணிக்­குப் பின்­பு­ற­மாக உள்ள காணி ஒன்­றைத் தரு­கின்­றோம் என்று வவு­னியா வடக்­குப் பிரதேச செய­லர் கூறு­கின்­றார். ஆனால் அங்கு வசிக்க முடி­யாது. அது காட்­டுப் பகு­தி­யாக உள்­ளது என்று அந்­தப் பெண் தெரி­வித்­தார்.

இந்த விட­யம் தொடர்­பா­கப் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். அது தொடர்­பான விசா­ரணை நேற்­று­முன்­தி­னம் வவு­னி­யா­வில் நடை­பெற்­றது.

காணிக்கு அரு­கில் உள்ள இரா­ணுவ முகா­மின் பொறுப்­ப­தி­காரி, 56ஆவது படைப்­பி­ரி­வின் மக்­கள் தொடர்­பா­டல் அதி­காரி, பிர­தேச செய­லக அலு­வ­லர் ஆகி­யோர் ஆணைக்­கு­ழு­வால் விசாரணைக்காக அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

எந்த அடிப்­ப­டை­யில் காணி விட­யத்­தில் நீங்­கள் தலை­யி­டு­கி­றீர்­கள்? என விசா­ரணை அதிகாரிகளால் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கேள்வி எழுப்பப்பட்­டது.

தாம் அந்­தப் பெண்ணை அச்­சு­றுத்­த­வில்லை என்­றும், பிக்கு ஒரு­வர் விகாரை அமைந்த காணியை பரா­ம­ரித்­துத் தர­வேண்­டும் என்று கோரியமைக்கு அமையே அதைப் பரா­ம­ரித்­தோம். காணி தொடர்பான அதி­கா­ரங்­கள் தமக்கு இல்­லா­த­தால் இந்த விட­யத்­தில் இருந்து முற்­றாக ஒதுக்­கிக் கொள்­கின்­றோம் என்று இரா­ணு­வத்­தி­னர் தெரி­வித்­த­து­டன், அதை எழுத்து மூல­மும் தந்­த­னர் என்று மனித உரிமை ஆணைக்­குழு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இந்த விட­யம் தொடர்­பாக வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லர் க.பரந்தா­ம­னி­டம் கேட்­ட­போது, அந்­தக் காணிப் பிரச்­சினை தீர்க்கப்பட்­டுள்­ளது என்­றும், கட்­ட­டம் அமைக்­கப்­பட்­டுள்ள இடத்­துக்­குப் பின்­பு­ற­மாக அமைத்­துள்ள காணி பெண்­ணுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்றும் பதி­ல­ளித்­தார்.

ஆனால் தனது விருப்­பத்­துக்கு மாறாக அந்­தக் காணி தரப்­பட்­டுள்­ளது என்­றும், தனது காணியே தனக்­குத் தேவை என்­றும் பாதிக்­கப்­பட்ட பெண் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு எழுத்து மூலம் வழங்­கிய முறைப்­பாட்­டில் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் பிரச்­சினை தொடர்­பாக மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் கட­மை­யில் இருந்த அதிகாரியான சட்­டத்­த­ரணி லீனஸ் வசந்தராஜாவிடம் கேட்­ட­போது

முறைப்­பாட்­டா­ள­ரான பெண் இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­ய­வர் என்ற ரீதி­யில் நாம் ஆழ­மான கரி­சனை கொண்­டுள்­ளோம். பிர­தேச செயல­கமே இந்த விட­யத்­தில் சரி­யான முடிவை வழங்க வேண்­டும். பௌத்த விகாரை அமைந்­துள்ள 7 ஏக்­கர் காணி 2010ஆம் ஆண்­ட­ள­வில் வவு­னியா வடக்குப் பிர­தேச செய­ல­கத்­தால் பௌத்த விகாரை அமைக்க வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அதற்கு­ரிய உரி­மைப் பத்­தி­ரங்­கள் வழங்கப்­ப­ட­வில்லை. 2010 ஆம் ஆண்­ட­ள­வில் மீள்­கு­டி­ய­மர்­வு­கள் ஆரம்பிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் காணி­யின் உரித்­துத் தொடர்­பாக முறை­யாக ஆரா­யாது பிர­தேச செய­ல­கத்­தால் விகாரை அமைக்­கக் காணி வழங்­கப்­ப­ட­டுள்­ளது.

இந்த விட­யத்­தில் காணியை உரிமை கோரும் பெண்­ணின் சம்மதத்துடன், அவர் விரும்­பும் தீர்வை வழங்­கு­வ­தற்­குப் பிர­தேச செயலகம் முன்வர வேண்­டும். 

No comments