விஜய்யின் மௌனம், ஸ்டாலின் மகிழ்ச்சி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ் ரசிகர்கள் அதிகம் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் உள்ள  நடிகரான விஜய் இந்த தேர்தலில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றாலும், அவர் திமுக கூட்டணிக்கே ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது,

கடந்த மார்ச் 17ஆம் தேதி மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், திமுக அணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தங்கப்பாண்டி நேரில் சந்தித்துத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்.

அதேபோன்று தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளர் வசந்தகுமாருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளபோதும் நடிகர் விஜய் இது பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் முடிவை கண்டுகொள்ளாமல் இருப்பது திமுக ஆதரவு நிலைப்பாடே என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

எனினும்விஜய் ரசிகர்கள் சிலர் தங்கள் வீடுகளின் முன்னால் ‘இது விஜய் ரசிகரின் வீடு அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டிகள் வைத்துள்ளனர். இதைப் புகைப்படமாக எடுத்துத் தங்கள் சமூக வலைத்தளங்களில்  பதிவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.இதனால் திமுகவினர் மகிழ்ச்சி கொந்தளிப்பில் இருக்கின்றனராம்.

No comments