மைத்திரிக்கு இன்னமும் பலமிருக்கின்றதாம்!


ஜனாதிபதிக்கு புதிதாக பிரதமர் ஒருவரை இப்போதும் நியமிக்கும் அதிகாரம் உண்டு எனவும், அவ்வாறு நியமித்ததன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்தார்.
அரசியல் புரட்சியொன்று இடம்பெறப் போவதாக பல தரப்புக்களிலும் கூறப்படும் கருத்துக் குறித்து இவரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்தார்.
பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மைப் பலம் இருக்குமானால், அரசியல் புரட்சியொன்றை மேற்கொள்ளலாம். அவ்வாறில்லாமல் செய்வதில் எந்தவிதப் பயனும் இல்லை. கடந்த காலத்தில் அவ்வாறான ஒரு நடவடிக்கையின் பெறுபேற்றைக் கண்டுகொண்டோம்.
பிரதமர் பொறுப்பை ஏற்க வேண்டாம்  என கடந்த காலத்திலும் நான் மஹிந்த ராஜபக்ஸவிடம் கூறினேன்.  மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி அந்தக் குழியில் விழமாட்டார் என தான் நம்புவதாகவும் குமார வெல்கம எம்.பி. மேலும் கூறினார். 

No comments