ஒத்துழைக்கத் தயார்! ஐ.நா பொதுச் செயலாளர்

சிறீலங்காவில் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும் ஒத்துழைப்பு தருவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுப்பதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் எந்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம், சமூகப் பேரவையின் நிதி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக, அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் எந்தோனியோ குட்டரஸுக்கும் இடையில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும்  இலங்கையில் கடந்தாண்டு இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியானது சுமூகமாகத் தீர்க்கப்பட்டமைக்கும் எந்தோனியோ குட்டரஸ் தமது மகிழ்ச்சியை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments