புத்தளத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

புத்தளம் - நூர் நகர் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் - மனகுண்டுவ பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் துப்பாக்கிக்கான அனுமதி பத்திரம் இல்லை. என்பதோடு, எனினும் துப்பாக்கி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ரவைகள் மற்றும் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபரிடமிருந்து இரவைகள் சிலவும், 380 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments