துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் பலி!


முல்லேரியாவ ரணபிம மாவத்தையில் உந்துருளிகளில்  வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவா உயிரிழந்துள்ளார்.

இச்சவம்பவம் நேற்று இரவு 7.40 மணியளவில் இடம்பெற்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தனது கெப்வண்டியை வீட்டில் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்ட வேளை எதிரே வந்த துப்பாக்கிதாரிகள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 38 வயதான வர்த்தகர் ஒருவர் என தெரியவந்துள்ளது.

No comments