தென்மராட்சியில் வாள் வெட்டு! ஒருவர் பலி! 7 பேர் காயம்!

தென்மராட்சி பாலாவிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை சுமார் முப்பது பேர் அடங்கிய கும்பல் ஒன்றே வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளைக் கொண்டு தாக்குதலை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கொடிகாமம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments