பள்ளிவாசலுக்கு தேடிச்சென்ற வடக்கு ஆளுநர்?


யாழ் பெரியகடை பகுதியில் அமைந்துள்ள முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நேற்று(29) இரவு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கௌரவ ஆளுநர் அவர்களை பள்ளிவாசலின் பிரதம  ஏ.எம். றலீம் அவர்கள் வரவேற்றார். இதன்போது அங்கிருந்த முஸ்லிம் சமூகத்துடன் சுமூகமான கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் ஈடுபட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
மேலும் தற்போது இடம்பெற்றுவரும் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான ஒன்றல்ல என்று குறிப்பிட்ட  ஆளுநர் அவர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான செயற்பாடுகளே அவையென்றும் குறிப்பிட்டதுடன் நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் பாதுகாப்பு தரப்பினருக்கு இவ்வேளையில் அவசியமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் என்.எம்.நிபாஹீர் உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தினர் பங்குபற்றினர்.

No comments