மகளுக்கு திருமணம்! சிறைவிடுப்பு கேட்க்கும் நளினி!

ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் நளினி மற்றும் முருகன் .

இவர்கள் இருவரின் மகளான லண்டனில் இருக்கும் ஹரிதாவிற்கு திருமணம் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை முன்னிட்டு  6 மாதங்கள் சிறைவிடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த மனு விசாரணைக்கு தானே நேரில்  வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளது முக்கியமானது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜூன்11ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments