சீன மொழியில் விளம்பரம், சர்ச்சையில் மம்தா பேனர்ஜி!

இந்திய நாடாளுமன்றம் தேர்தல் நாட்கள்  நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கொல்கத்தா நகரின் சுவர்களில் மம்தா பேனர்ஜிக்கு ஆதரவாக சீன மொழியில் தேர்தல் விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இது கொல்கத்தாவில் சீன சமூகத்தினர் வாழ்வதாகவும் அவர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதக கட்சியினர் தெரிவிக்கினர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவுக்குக் குடிப்பெயர்ந்த சீன ஹக்கா மக்கள் மக்கள்தொகை ஆயிரக்கணக்கில்  மட்டுமே வாழ்கின்றனர்

இதனால் இந்தச் சொற்ப வாக்குகளுக்காக எதற்கு இத்தனை விளம்பரங்கள் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments