கொச்சிக்கடை தேவாலயம் அருகே குண்டு வெடித்தது!


கொழும்பு கொச்சிக்கடையில் கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகே உள்ள ஜம்பட்டா வீதியில் வெடிப்பதற்காக தரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிற்றூர்த்தி ஒன்றை சிறீலங்காப் படையினர் சோதனையிட்ட போது வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்ட பொதி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.

நேற்றிலிருந்து வெள்ளைச் சிற்றூர்தி அதே இடத்தில் தரித்து நின்றதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பாதுகாப்புப் படையினர் அவ்விடத்திற்கு விரைந்து சோதனை நடத்திய போதே குண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

அப்பொதிகுண்டை சிற்றூர்த்தியில் வைத்து சிறீலங்காக் காவலத்துறையினர், அதிரடிப் படையினர் மற்றும் வான் படையினர் செயலழக்கச் செய்யதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments