வெயிலால் முதியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்?

வடக்கில் இடையிடையே மழை பெய்துவருகின்ற போதும் முல்லைதீவில் வெயிலால் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சடலம் இனங்காணப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சடலத்தினை வைத்திருப்பதற்கான போதிய குளிர்சாதன வசதிகள் இன்மையால் , வெளிமாவட்டங்களுக்கு சடலங்கள் அனுப்பும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments