ஏற்கமுடியதென்கிறார் ஜங்கரநேசன்?

வடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ள கருத்தை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று வட மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் இருப்பதற்கான அவசியம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தினரை முழுமையாக இங்கிருந்த செல்ல வேண்டுமென கூறவில்லை எனினும். வடக்கு கிழக்கில் தேசிய பாதுகாப்பு நிமித்தம் முகாம்களை நிறுவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் சர்வதேச நாடுகளின் படையெடுப்புக்கள் வரும் அளவிற்கு இலங்கைக்கு அச்சுறுத்தல் கிடையாது என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்,
அதனை தடுக்க வேண்டியவர்கள் படையினரே அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாது தேசிய பாதுகாப்பிற்காக இங்கு நிலைகொண்டிருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வட மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments