வீட்டுத் தோட்டத்தில் கிளைமோர் குண்டு மீட்பு!

பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியிலுள்ள கிராமம் ஒன்றின் வீட்டுத் தோட்டத்திலிருந்து, புதைக்கப்ட்டிருந்த 4 கிலோ கிராம் நிறையுடைய கிளைமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (18) காலை மன்னம்பிட்டி, இலக்கம் 117 என்ற முகவரியில் வசித்துவரும், இந்துராஜா கோபால் என்பவரது வீட்டுத்தோட்டத்திலிருந்தே, குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கிளைமோர் குண்டு 2005 ஆம் ஆண்டில் உற்பத்திச் செய்யப்பட்டதென தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பசுக் கன்றை புதைப்பதற்காக, வீட்டுத்தோட்டத்தில்  குழி வெட்டிய போது கிளைமோர் குண்டை அவதானித்த கோபால் காவல்துறைக்கு தகவல் வழங்கினால்

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் குண்டை கிளைமோர் குண்டை அங்கிருந்து மீட்டுச் சென்றுள்ளனர்.

No comments