விசாரணைக்காக சர்வதேசத்தை எப்படி கைகூப்பி வரவேற்கிறது சிறீலங்கா - அனந்தி

சிறீலங்காவின் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேசம் தலையிட முடியாது எனக் கூறி வந்த இலங்கை அரசாங்கம் தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்க சர்வதேசத்தை கைகூப்பி வரவேற்றுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் அமைச்சருமான அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பில்  இழைக்கப்பட்ட சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோனே்றே கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் இங்கு வாழ்கின்றபோது அத்தகைய நஷ்டஈடுகள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலையே உள்ளது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments