சுற்றுலா வாகனம் விபத்து! 28 ஜெர்மனியர்கள் பலி!

போர்த்துக்கல்  நாட்டின் மடிரா தீவுப்பகுதியில் புதனன்று  ஏற்பட்ட விபத்தொன்றில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 28 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்தில் பலியாகியவர்கள்  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் 11 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவார்கள்.

வாகனம்  வளைவொன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததினால்இந்த  விபத்து நிகழ்ந்ததென்று அதில் உயிர் தப்பியவர் கூறியுள்ளார்.

No comments