விபத்து பெண் பலி! நால்வர் காயம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய பயணித்த சிற்றூர்தி பாரவூர்தியுடன்  நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

விபத்து புத்தளம்-சிலாபம் வீதியில் ஆரச்சிக்கட்டுவ என்ற இடத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றிருந்தது.

உயிரிழந்தவர் 48 வயதுடைய நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த லண்டனில் இருந்து வருகை தந்த அருன்மாறன் கலா என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


No comments