ஒருபுறம் வீராவேசம்: மறுபுறம் காசு கேட்கும் சம்பந்தன்!


தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்காது இராணுவ ரீதியில் அதனை அடக்குவதற்கு முயற்சிப்பதன் ஊடாக எஞ்சிய 50 வீத தமிழர்களையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறா அரசாங்கம் கூறுகிறதென இலங்கையின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக கைதூக்கும் முன்னர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தக் குற்றங்களை மூடி மறைக்கவே அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சித்து வந்துள்ளது. இறுதியுத்தத்தில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் 4 இலட்சம் பொது மக்கள் வாழ்ந்த இடங்களில், 2 இலட்சத்து 95 ஆயிரம் பேர் மட்டுமே இராணுவத்திடம் சரணடைந்தனர். அப்படி என்றால் எஞ்சிய பொதுமக்கள் எங்கே? இதுகுறித்து பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்து பாதுகாப்பு தரப்பை விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். மூன்றரை இலட்சம் முதல் நான்கு இலட்சம்பேர் வரை முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்தபோதும் அங்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரையில் இருப்பதாகக் கணிப்பிட்டே உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அரசாங்கம் அனுப்பியுள்ளது. அங்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு காணப்பட்டதெனவும் முப்படைகளிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அதேவேளை இவ்வளவு வீர வசன உரைகளின் மத்தியிலும் இப்போது 5 பில்லியன் ரூபா வடக்கு கிழக்கு அபிவிருத்தி ஒதுக்கப்பட்டுள்ளது. எமது பிரதேசங்களில் அபிவிருத்திக்கு 24 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதில் 70 வீதமான நிதியையாவது வழங்கினால்த்தான் எமது பிரதேச அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். நமது மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும். எமது பிரதேசங்களில் விவசாயத்தை உருவாக்க வேண்டும். நாம் எமக்கான நிகழ்ச்சி நிரலை தயார்படுத்தி வைத்துள்ளோம். அதற்கான நிதியை நீங்கள் வழங்க வேண்டும். நல்லிக்கத்தை உருவாக்க வேண்டுமென்றால் அரசாங்கம் பொதுமக்களுக்கு கைகொடுக்க வேண்டும் எனவும் கேட்க அவர் தவறவில்லை.

No comments