வரவு செலவுத்திட்ட டீல் பேச கூட்டைமைப்பைச் சந்தித்தார் ரணில்

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு (இறுதி வாக்கெடுப்பு) மீதான வாக்கெடுப்புக்கும் ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் திரைமறைவில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வரும் நிலையில், கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்குத் தேவையாகவுள்ளது.

எனினும் ரணிலுக்கு மக்கள் சார் பிரச்சனைகள் குறித நிபந்தனை எதுவும் முன்வைக்காது தமது வங்கிக் கணக்குகளை நிரப்பும் கைங்கரியத்திலேயே கூட்டமைப்பு ஈடுபட்டு அதற்கான டீலினைப் பேசிக்கொண்டிருக்கும் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

No comments