மறவன்புலவு சச்சியின் பேச்சுக்களே சமய முரண்பாடுகளை உருவாக்குகிறது

சச்சிதானந்தன் ஜயாவின் பேச்சுகளும் செயற்பாடுகளும் சமயங்களுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தப்ப பார்க்கிறது என்று என்று யாழ். கிறிஸ்தவ திருச் சபைகள் ஸ்தாபனங்களின் ஜக்கிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (17) மதியம் யாழ். கிறிஸ்தவ திருச் சபைகள் ஸ்தாபனங்களின் ஜக்கிய அமைப்பினரால் திறப்பின் வாசல் மூன்று நாள் ஜெபம் என்ற நிகழ்வு பொலிஸாரினால் தடைசெய்யப்பட்டிருக்கிறது என்ற பொய்யான கிறிஸ்தவத்துக்கு எதிரான செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு மேலும் தெரிவிக்கும் போது

சச்சிதானந்தன் ஜயா வந்தவுடன் தான் சமயத்துக்குள் பிரச்சினை உருவாகியிருக்கிறது. பொய்களைச் சொல்லி மக்களை குழப்பிறது. ஓவ்வொரு குடும்பங்களுக்குள்ளும் பிரச்சினையை பிரளியத்தை  உருவாக்கிறது தான் இவருடைய பேச்சுகளும் செயற்பாடுகளும் இருக்கிறது. இவர் முன்வைக்கிற காரியங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை அதேபோல அவருடைய எப்படிப்பட்டதான தெளிவற்ற விதண்டாவிதமான முன்னுக்கு முன் முரணான பேசக் கூடாத காரியங்களைப் பேசி இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தப் பார்க்கிறார்.

சச்சிதானந்தன் ஜயா கூறுவது போல சமய ரீதியான எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதுடன் உருவாகிறதுக்கு ஏதுவான காரியங்கள் எதையும் யாருமே செய்யவில்லை.

சமய ரீதியில் ஒரு பிரச்சினைகளை உருவாக்கி தமிழ் இன உறவுகளுக்குள்ளேயே இப்படிப்பட்டதான ஒரு வேற்றுமையான குரோதங்களை உண்டுபண்ணக்கூடிய காரியங்களை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு வந்து காலப் போக்கில் இது ஒரு தீவிரவாதப் போக்காக மாறுமோ என்று நாங்கள் அச்சப்படுகிறோம்.
ஏனென்றால் இப்படிப்பட்ட செய்திகள் வந்ததின் பிறகு எங்களில் அநேக போதகர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சந்தேகநபர்களிடம் இருந்து கொலை அச்சுறுத்தல் வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கிறது. இது குறித்து நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்திருக்கிறம்.

இவைகள் எங்களுக்குள் இருக்கக் கூடிய கள்ள கபடமற்ற உறவைப் பாதிக்கக் கூடிய செயற்பாடுகளாகத் தான் நடைபெறுகிறது. இதற்கு பின்னணியில் அரசியல் இருக்குமோ என்பதை ஆழமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. இது தொடர்பில் கிறிஸ்தவ அமைப்புகளுடன் ஆலோசித்து வருகிறோம். இந்து அலுவலக அமைச்சர் மனோகணேசனுடன் கூட பேசி வருகிறோம். இந்து தலைமைகளுடனும் பேசவுள்ளோம்.

No comments