ஜனாதிபதி யார்:தெற்கு முடிவெடுக்கின்றது?


2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கொடுப்பின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பதா என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பத்தரமுல்ல - நெலும் மாவத்தையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவுபெற்று 5 நாள்களின் பின்னரே(10 ஆம் திகதி), ஐ.தே.கவுக்கு எதிரான பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சியோடு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கடு உள்ளது என்றார்.
 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிப்பதாக தங்களிடம் சுதந்திரக் கட்சி உறுதியளித்திருந்த நிலையில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதால், அக்கட்சி மீதான அவநம்பிக்கை தமக்குள் ஏற்பட்டிருக்கிறது என்றார்.
ஆகவே இந்த தவறை சுதந்திரக் கட்சி திருத்திக்கொள்வதற்கு  5​ ஆம் திகதி சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments