கோத்தாவா? மைத்திரியா ? ரணிலா?


தெற்கின் அடுத்த ஜனாதிபதி தொடர்பான முனைப்பு அனைத்து மட்டங்களிலும் சூடுபிடித்துள்ளது.மீண்டும் ஜனாதிபதி அல்லது பிரதமர் கதிரைக்கான முனைப்பில் மைத்திரி மும்முரமாக மறுபுறம் கடும்போக்கு சிங்கள சமூகமோ கோத்தபாயவிற்கு வெள்ளையடித்து கதிரையேற்றும் கனவில் மும்முரமாகியுள்ளது.

அமெரிக்கா சென்றிருந்த கோத்தாவை சந்தித்துள்ள புலம்பெயர் சிங்கள கடும்போக்கு இளம் சமூகம் கல்வி உள்ளிட்ட பலவற்றில் புலம்பெயர் தமிழர்களது வளர்ச்சி அதனால் எதிர்காலத்தில் சிங்கள  தேசத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை பற்றி சுட்டிக்காட்டியதாக தெரியவருகிறது.

மறுபுறம் மைத்திரியோ போதைபொருளிற்கு எதிரான நாயகனாக தன்னை காண்பிக்க முற்பட்டுள்ளார்.

அவ்வகையில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட பெருமளவு போதைபொருட்களை அழிக்கின்ற பெரும் நடவடிக்கையொன்றை இன்று பிரச்சாரங்களுடன் நடத்தி முடித்துள்ளார்.

மறுபுறம் ரணில் தரப்போ கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் தலைமைகளது ஆதரவுடன் தமது அரசியல் பயணத்தை தொடர திட்டமிட்டுள்ளது தெரிந்ததே.

No comments