பொலிஸ்மா அதிபரை பதவி விலகக் கோரிக்கை

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (22) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலனாய்வுப் பிரிவுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது. எனினும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே, பொலிஸ்மா அதிபர் பதவி விலகவேண்டும்.

ஜனாதிபதியின் கீழ்தான் பொலிஸ் திணைக்களம் இருக்கின்றது. இன்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை விடுக்கப்படும்” – என்றார்.

No comments