மண்டைதீவில் மீண்டும் நேவிக்கு காணி பிடிப்பு!


ரணில் மைத்திரி அரசு மீண்டும் வடகிழக்கில் காணி பிடிப்பில் மும்முரமாகியுள்ளது.அவ்வகையில் மண்டைதீவில் கடற்படைக்கான காணிபிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

நில விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மைத்திரி ரணில் என காணி பிடிப்பு தொடர்பில் பல உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருந்தது.அதன் தொடர்ச்சியாக மண்டைதீவில் கடற்படையின் வசமுள்ள 18 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்யும் பணிகள் வரும் 11ம் திகதி காலையில் இடம்பெறவுள்ளது.

மண்டைதீவில் அமைந்துள்ள வெல்சுமன கடற்படை தளம் அமைந்துள்ள 18 ஏக்கர் காணியையும் நிரந்தர சுவீகரிக்க திட்டமிடப்பட்டு, அளவீட்டு பணிக்கு முன்னதாக காணி உரிமையாளர்களிற்கு அறிவித்தல் விடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி, பிரதமர் வழங்கிய உத்தரவாதங்களின் பின்னர் அந்த அளவீட்டு பணி கைவிடப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அது கைவிடப்படவில்லை. வரும் 11ம் திகதி அளவீட்டு பணிகளிற்கான ஆயத்தங்கள் நடந்து வருகிறது.

இதனிடையே 1990ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகnhலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகள் இப்பகுதியினுள்ளேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments