யாழில் ஊடகவியலாளர்களிற்கு விருது விழா!


ஜஎம்எஸ் சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பும் யாழ்.ஊடக அமையமும் இணைந்து முன்னெடுத்த தகவல் அறியும் சட்டத்தைப்பயன்படுத்தி வடமாகாண ஊடகவியலாளர்கள் அறிக்கையிட்ட கட்டுரைகளில் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழில் நடந்திருந்தது.

இந்நிகழ்வில் மிகச் சிறப்பாக அறிக்கையிட்ட மூன்று ஊடவியலாளர்களுக்கு விருதும் இந்தியாவில் இடம்பெறும் சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டிற்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

வடக்கின் ஜந்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கெடுத்த நிகழ்வில் உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர்கொடுத்த ஊடகவியலாளர்களிற்கு இருநிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பொது சுடரினை மூத்த போராளியும் ஊடகவியலாளருமான மனோகர்(காக்கா) ஏற்றி வைத்திருந்தார்.

யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் செல்வகுமார்,யசீகரன் மற்றும் முல்லைதீவு ஊடகவியலாளர் குமணன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றிருந்தனர்.

பயிற்சியினை பூரணப்படுத்திய ஊடகவியலாளர்களிற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ,ஜஎம்எஸ் சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பு மற்றும் யாழ்.ஊடக அமைய பிரதிநிதிகளும் பங்கெடுத்ததிருந்தனர்.


No comments