தற்கொலைத் தாக்குதல்கள் கிழக்கில் ஒத்திகை பார்க்கப்பட்டதா ?கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லீம் பிரதேசம் ஒன்றில் இலங்கையில் நேற்று இடம்பெற்ற தொடா் குண்டு வெடிப்புக்களுக்கான ஒத்திகை பாா்க்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 13ம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா, பாலமுனைப் பிரதேசத்தில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிக்கவைத்து பரீட்சித்துப் பார்க்கப்பட்டாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தேவாலய மற்றும் நட்சத்திரவிடுதி குண்டுத் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு தாக்குதல்களுக்கான ஒத்திகை கிழக்கு மாகாணத்தில் உள்ள பாலமுனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டதா என்கின்ற கேள்வியை இந்த விடயம் ஏற்படுத்தி நிற்கின்றது.

No comments