குண்டுதாரியின் பெல்ட் வேலை செய்யாமையால் தப்பியது தாஜ் ஹோட்டல்தெகிவளையில் குண்டு வெடித்து இறந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட் , தாஜ் ஹோட்டலில் தங்கி இருந்து குண்டை வெடிக்க வைக்க பெல்ட்டை இழுத்த போதும் அது இயங்காத காரணத்தால் அவர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்த காட்சிகள் தாஜ் ஹோட்டல் சீசீடீவீயில் பதிவாகியுள்ளது.

கண்டி வலம்பட பகுதியைச் சேர்ந்த அப்துல் லதீப் ஜமீல் மொகமட், தவ்கித் ஜமான் உறுப்பினர்களோடு தாக்குதலுக்காக கொழும்பு வந்து தற்கொலைக் குண்டுகளோடு முதல்நாள் இரவு தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளார். அடுத்துநாள் காலை 9.00 -9.30 வரைப்பட்ட நேரத்தில் தாஜ் ஹோட்டலில் மக்கள் உள்ள பகுதிக்கு வந்து தனது குண்டு பையின் பெல்ட்டை பலமுறை இழுத்துள்ளார். அது செயல்படாதிருக்கவே வாடகை வாகனமொன்றில் தெகிவளையில் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு வந்த பின் குண்டை செயலிழக்க முற்பட்ட வேளையில் அது வெடித்திருக்கலாம் என பாதுகாப்பு தரப்பு சந்தேகிக்கிறது.

No comments