நோட்ர-டாம் தேவாலயம் 5 ஆண்டுகளில் புனரமைக்கப்படும் - பிரஞ்சு அதிபர்

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தீயால் எரிந்து  எரிந்த 850 ஆண்டு காலப் பழமை வாய்ந்த நோட்ர-டாம் தேவாலயத்தை 5 ஆண்டுக்குள் புனரமைப்பதாக உறுதியளித்துள்ளார்.
தொலைக்காட்சிக்கு வழங்கிய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தீயணைப்பாளர்கள், காவல்துறையினர் ஆகியோருடன், தேவாலயப் புனரமைப்புக்கு நிதியுதவி வழங்க முன்வந்தோருக்கும் அதிபர் மக்ரோன் நன்றி தெரிவித்திருந்தார். 

No comments