இன்று இரவும் ஊரடங்குச் சட்டம் அமுலில்

இன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்படுகின்றது.

No comments