அப்புறப்படுத்துங்கள் அல்லது தூக்கி எறிவேன்

யாழ்.மத்திய பேருந்து நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள வியாபார நிலையங்களை ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்னா் அகற்றுமாறு மாந கரசபை முதல்வா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இந்நிலையில் தமக்கு முன்னர் மாற்றிடங்கள் வழங்கப்படுமென கூறிய முதல்வர் தற்போது மாற்று இடம்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தை நீங்களே பாருங்கள் என தெரிவித்ததையிட்டு தாம் கவலை அடைவதாக அங்காடி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி விடயம் தொ டர்பில் அங்காடி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எமது சங்கத்தினரை அழைத்த யாழ்.முதல்வர் உங்களுக்கு இடம் ஒதுக்கி புதிய இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின் கடைகளை விட்டு வெளியே றலாம் என கூறியிருந்தார்.

இதன் பின்னர் அண்மையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் யாழ்ப்பாணம் விஜயம் செய்த நிலையில் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டதும் அதன் மேல் தளத்திலுள்ள கடைகள் தருவதாக முதல்வர் கூறினார்.

இவ்வாறான நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்.முதல்வர் இலங்கை போக்குவரத்து சபையினருடன் உடன்பாட்டை செய்ததாகவும் பேருந்து நிலைய வளவினுள் உள்ள வியாபார நிலையங்களை ஏப்ரல் 30 க்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு எம்மிடம் நேரடியாகக் கூறினார்.

அப் புறப்படுத்தாவிட்டால் யாழ்.மாநகர சபை அப்புறப்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். இதனையிட்டு மனவேதனை அடைகின்றோம். இந்த மனவேதனைக்குரிய விடயத்தால் 68 கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களது குடும்பங்கள் என 136 குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்கு மாற்றுவழியின்றி துயரத்துக்குள் தள்ளப்படப் போகின்றது.

பல வங்கிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் கடன்பெற்று நாளாந்தம் மீளசெலுத்தி வியாபாரத்தையும் குடும்பத்தையும் பிள்ளைகளின் படிப்பையும் சுமக்கும் எமக்கு இச் செயற்பாடு நடுவீதியில் கலைப்பதாக அமைந்துள்ளது. தமிழரின் விடிவு என நினைத்து எமக்கு நல்லது செய்வார்கள் என எண்ணி வாக்களித்த நமக்கு தெரு வாழ்வுதான் மீதியாக போகின்றது.

எமது நாளைய நாட்கள் எப்படி அமையும் என்ற ஏக்கத்தோடு வாழ்வை மீண்டும் தொலைக்கப்போகிறோமா என ஏங்கும் நிலையில் நாம் உள்ளோம். எமது நிலைமையை கருத்தில் எடுத்து அரச அதிகா ரிகள், தமிழ் தலைமைகள், அரசியர் தலைவர்கள் எமது நல்லதொரு எதிர்காலத்துக்காக குரல்கொடுக்குமாறு கோருகின்றாம். என வியாபாரிகள் கோரியுள்ளனர்.

No comments