கைதடி உணவகத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து

யாழ்.கைதடிய பகுதியில் உணவகம் ஒன்றில் கடமையாற்றும் இளைஞன் மீது இனந்தொியாத நபா்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், கத்தியினால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனா்.

கைதடி சந்தியில் உள்ள குறித்த உணவகத்திற்கு நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுக்கும் மேற்பட்டவர்கள் இளைஞனின் பெயரை கூறி கடைக்கு வெளியே அழைத்து இளைஞன் மீது தலைக்கவசத்தால் (ஹெல்மெட்) தாக்கி பின்னர் தாம் கொண்டு வந்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதுடைய பூலாசிங்கம் ஜேசுதாஸ் என்பவரே தாக்குதலுக்கு இலக்கானார். குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments