சிங்கள தூதரகமாகியது கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம்!


இலங்கை அரசுடனான புர்pந்துணர்வின் அடிப்படையில் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் அளிக்க செல்ல திட்டமிட்டிருந்த பலரது விசா விண்ணப்பங்களை சுவிஸ் தூதரகம் நிராகரித்துள்ளது. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலுமிருந்தும் விண்ணப்பித்த பலரது விண்ணப்பங்களே கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த பலர் இம்முறை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சாட்சியமளிக்க செல்லவிருந்தனர். அவர்களது விசாவிற்கான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

எனினும் கொழும்பை மையப்படுத்திய இனவாத சிங்கள அமைப்புக்களிற்கு அள்ளி விசா வழங்கும் கொழும்பிலுள்ள தூதரகம் மறுபுறம் பாதிக்கப்பட்ட தமிழ் தரப்புக்களை கண்டுகொள்வதில்லை.

அதிலும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 

விசா விண்ணப்பங்கள் கொள்கை முடிவின் அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments