செல்வமும் மழுப்பலும்

அர­சி­யல் பிரச்­சி­னை­களை நாங்­கள் கையில் எடுத்­துச் செயற்­ப­டு­கின்ற சூழ­லில் அலங்­கார வளைவு உடைப்­புச் சம்­ப­வங்­கள், மதங்களுக்கிடையி­லான பிரச்­சி­னை­களை இனப்­பி­ரச்­சினை என்ற முக்கிய பிரச்­சி­னையை மறைக்­கின்­றது என்று தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்­பின் வன்­னித் தேர்­தல் மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.

திருக்­கே­தீச்­ச­ரச் சம்­ப­வம் தொடர்­பாக அவர் ஊட­கங்­க­ளுக்கு நேற்­றுத் தெரி­வித்­த­தா­வது:

மன்­னார் மாவட்­டத்­தில் இந்து மக்­க­ளும், கத்­தோ­லிக்க மக்­க­ளும் இணைந்து செயற்­பட்டு வாழ்ந்து வரு­கின்­ற­னர். இடை­யிலே இணைந்து பூதா­கா­ ர­மா­கச் செயற்­ப­டு­கின்ற தன்­மையை நாம் ஏற்­றுக்­கொள்ள முடியாது என்று திருக்­கே­தீச்­ச­ரத்­தில் இடம்­பெற்ற சம்­ப­வம் மதங்களுக்கி­டை­யில் பிரச்­சி­னை­ களை உரு­வாக்­கு­வது போன்ற நிலைப்­பாடு தோன்­றி­யுள்­ளது.

இந்த வகை­யில் மதங்­கள் மக்­களை நெறிப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்பாடுக­ளில் ஈடு­பட வேண்­டும். சட்ட ரீதி­யான சில செயற்­பா­டு­கள் இருந்­தும்­கூட அது மறுக்­கப்­ப­டு­கின்ற பட்­சத்­திலே குறித்த பிரச்­சினை ஏற்­பட்­டி­ருக்­க­லாம். இருந்­தா­லும் இரண்டு பக்­கங்­க­ளி­லும் தவ­று­கள் காணப்­பட்­டா­லும் கூட குறித்த தவ­று­கள் திருத்­தப்­பட வேண்­டும்.
இனப்­பி­ரச்­சினை என்­பது தமி­ழர்­கள் எல்லோரும் ஒன்­றாக இணைந்து செயற்­ப­ட­வேண்­டும். எமது மக்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னை­கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

No comments