களவு போன பிக்காசோபின் ஓவியம்! 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீட்பு!

களவு போன பிக்காசோவின் (Picasso) புகழ்பெற்ற ஓவியம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைத்துள்ளது.

சவுதி அரேபியாவின் பணக்காரர் ஒருவருக்குச் சொந்தமான இந்த ஓவியம் பிரான்ஸ் நாட்டில் 1999ஆம் ஆண்டு களவு போயுள்ளது.

சவுதிப் பயணக்காரர் தனது உல்லாசக் கப்பலில் பிரான்ஸ் வந்திருந்தபோது குறித்த ஓவியத்தை இனந்தொியாதோர் களவாடிச் சென்றனர்.

களவாடப்பட்ட இந்த ஓவியம் தற்போது நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் உள்ள ஒரு பெயர் தவிர்க்கப்பட்ட காப்புறுதி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த கலை புலனாய்வாளர் ஆர்தர் பிராண்ட் என்பவரே இவ் ஓவியத்தை மீட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ (Pablo Picasso) கடந்த 1938 ஆம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை சித்தரிக்கும் வகையில் ஓவியமே இது.

இந்த ஓவியத்தின் தற்போதைய பெறுமதி கிட்டத்தட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஓவியம் ஆர்தர் பிராண்ட் கைக்கு கிடைப்பதற்கு முன் கள்ளச்சந்தை மூலமாக பத்துக்கும் மேற்பட்டோரிடம் கை மாறப்பட்டுள்ளது.  

No comments