மர்ம நபரின் கத்திக்குத்தில் லண்டனில் நால்வர் படுகாயம்!

வடக்கு லண்டனில் மர்ம நபர் ஒருவரின் கத்திக்குத்துக்கு நான்கு பேருக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலாவது கத்திக்குத்துச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில், எட்மண்டன் என்ற இடத்தில் அபெர்டீன் சாலையில் 45 வயதான பெண் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது மர்மநபர் கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த பெண் மிகவும் ஆபத்தான நிலையில் கிழக்கு லண்டனில் உள்ள மருத்துமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இரண்டாவது கத்திக்குத்துச் சம்பவம் அருகிலுள்ள பார்க் அவென்யூவில் நடத்தப்பட்டுள்ளது. சிறு காயங்களுக்கு உள்ளான நபர் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரின் உயிருக்கு எந்தவித அபாயமும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது கத்திக்குத்துச் சம்பவம் அதிகாலை 4 மணியளவில் செவின் சிஸ்டர் நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அருகில் 23 வயதுடை இளைஞன் மீது நடத்தப்பட்டுள்ளது. இவரின் நிலைமையும் கவலைக்கிடமான நிலையில் மருத்துமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

இறுதிச் சம்பவம் இன்று முற்பகல் 9.43 மணியளவில் ப்ரெடென்ஹாம் சாலையில் ஆணின் மீது நடத்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர் ஒல்லியானவர், முகத்தை மூடியவாறு கறுப்பு நிறத்திலான உடை அணித்திருந்தார். இவர் 6 அடி 3 இச்சி உயரம் உடையவர் என்றும் காவல்துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். தாக்குதலாளி பின்பக்கமாக வந்தே அனைவரையும் குத்தியுள்ளார். இத்தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பு இல்லை என காவல்துறையினர் மேலும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments