கீரிமலையில் அரசிற்கு காணி கொடுக்கிறார் மாவை!


தமிழ் மக்களது காணிகளை விடுவிப்பதில் மட்டும் மாவை சேனாதிராசா நல்லிணக்கத்தை வெளிப்படுத்த எப்போதுமே தவறுவதில்லை.ஏற்கனவே நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களிற்கு வீடமைப்பினை மனந்திறந்து கையளித்த அவர் தற்போது கீரிமலைப் பகுதியில் முன்னைய மஹிந்த அரசினால் நட்சத்திரவிடுதி அமைக்க கையகப்படுத்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மனமுவந்து வழங்க தயாராகியுள்ளார்.

தமிழ் மக்களின் நிலங்களில் கடற்படையினர் வசமுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட 64 ஏக்கர் நிலப்பரப்பில் 62 ஏக்கர் திலப்பரப்பினை சுற்றுலா அதிகார சபையிடம் வழங்குவது என்ற தீர்மானத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என வடக்கு மாகாண ஆளுநரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராயா தெரிவித்துள்ளாராம்.

கீரிமலைப் பகுதியில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஜனாதிபதி மாளிகையுடன் கூடிய 64 ஏக்கர் திலப்பரப்பினை முழுமையாக விடுவிக்குமாறு நீண்டகாலமாக கோரிவருகின்றனர்.இந்நிலையில் தற்போது அந்த இடத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் கடற்படைத் தளத்தை நகர்த்தி எஞ்சிய 62 ஏக்கர் நிலப்பரப்பினையும் ஜனாதிபதி மாளிகையுடன் சுற்றுலா அதிகார சபையிடம் வழங்குவதற்கு ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் இணக்கம் கானப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள 20 ஏக்கர் திலப்பரப்பினை மட்டும் சுற்றுலா அதிகார சபையிடம் கையளிப்பது தொடர்பில் ஆராய முடியும். அதற்கு மாறாக மக்களின் வாழ்விடம் , வரலாற்று ஆலயப் பகுதி , பொது மயானம் , கிருஸ்ணன் ஆலயம் , சடையம்மா மடம் , குழந்தைவேல் சுவாமி சமாதி , காசி விஸ்வநாதர் ,ஆலயம் என வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்கள் 30ற்கும் மேற்பட்டவை அப்பகுதியில் கானப்படுகின்றது.

எனவே இப்பகுதியில் கானப்படும் வரலாற்று சின்னங்கள் மக்களின் வாழ்விடங்கள் அடங்கிய பகுதிகளும் கானப்படுவதனால் ஜனாதிபதி மாளிகை தவிர்ந்த ஏனைய 42 ஏக்கர் நிலப்பரப்பினையும் உடனடியாக மக்களிடமே கையளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் அங்கு கானப்படும் 62 ஏக்கர் நிலத்தையும் சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments