டக்ளஸ் கிழக்கு போகின்றார்?

கிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அவ்வகையில் அகில இலங்கை தமிழர் சபை மற்றும் ஈபிடிபி ஆகியவை இணைந்து கிழக்கு மாகாணத்தில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்குவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக தமிழரசுக்கட்சி ஆதரவு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பமானது கடந்த 2018 நவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.புதிதாக பதிவு செய்யும் கட்சியின் தலைவராக தம்பிஅப்பா கோபாலகிருஸ்ணனும் செயலாளராக முத்து இருளன்முருகனும் பதியப்பட்டுள்ளதோடு உப செயலாளராக அருந்ததி சிவரட்ணம் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பத்தில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் காசிலிங்கம் - விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் ஒப்பமிட்டுள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலங்களில் குறித்த விக்னேஸ்வரனே அமைச்சின் ஆலோசகராக இருந்திருந்தார்.
யாழில் ஈபிடிபியால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளின் பங்காளியாக விக்கினேஸ்வரனும் இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments