பதறத் தொடங்கியது கூட்டமைப்பு?



வடக்கு மாகாண முன்னால் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் அபார வேகம் கூட்டமைப்பிடையே பேதியை கலக்க தொடங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சரது கட்சியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உண்மையில் அதுவொரு கட்சியல்ல என்றும் தெரிவித்துள்ளார். 

ஒரு கட்சி அவரிடத்தில் இருக்கிறதாக எனக்குத் தெரியாது. அவர் ஒரு பெயரை அறிவித்திருக்கிறார். ஆனால் அரசியல் கட்சி ஒன்று இருப்பதாக எவருக்கும் தெரியாது. அரசியல் கட்சி என்று சொன்னால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இருக்க வேண்டும். 

அப்படி ஒரு கட்சி அவரிடத்தே இருப்பதாக எங்களுக்குத் தெரியாது. நாளைக்கு எவரும் ஒரு பெயரைச் சொல்லலாம். அவ்வாறு ஒரு பெயரைச் சொல்லி அது கட்சி என்று சொல்லி திரிகிறார்.

ஸ்தாபகரும் பொதுச் செயலாளரும் தான் தான் என்று அவரே சொல்கிறார். அது எங்கு தெரிவு செய்யப்பட்டதென்று தெரியாது. மாநாடு ஏதும் நடத்தப்பட்டதா, கட்சி உறுப்பினர்கள் ஐனநாயக முறையிலே இவரைத் தெரிவு செய்தார்களா, கட்சி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள்.ஒரு பட்டியல் இருக்கிறதா? மற்ற உறுப்பினர்கள் யார்?. 

அது மட்டுமல்ல இந்தக் கட்சிக்குத் தலைவர் யார் என்று கூட இன்னும் ஒருத்தருக்குத் தெரயாது. தலைவர் இல்லாத ஒரு கட்சி. ஆனால் உண்மையிலையே அது கட்சி கூட கிடையாது. ஆகையினால் இப்படியான கோமாளித்தனமான செயற்பாடுகளைக் கண்டு நாங்கள் விமர்சிக்க வேண்டிய அவசியம் கிடையாதென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments