தினகரனுக்கு பிறகுதான் உங்களுக்கு! சுயேச்சைகள் பரிதவிப்பு!

தினகரனின் அனைத்து அமமுக வேட்பாளர்களுக்கும் ஒரே பொதுச் சின்னம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதனால்
அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் வரை, மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, அனைத்துத் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார்.

அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்படுவதாக இருந்தால் அந்த சின்னம் மற்ற வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படக் கூடாது. இதனால், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்குவது தாமதமாகும் எனத் தெரிகிறது.

No comments