யாழ்.பல்கலையில் ஞாயிறு மாநாடு?


இலங்கை அரசு தொடர்பில் ஐநா சபையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை வலியுறுத்தும் மாபெரும் மாநாட்டுக்கான  முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.ஞாயிறு காலை 10 மணிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கெடுக்க அனைத்து அமைப்புக்களிற்கும் ,மதகுருமார்கள் மற்றும் பிரதிநிதிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும்  இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றத்திற்கு உடனடியாக சர்வதேச விசாரனை தேவையெனவும் வலியுறுத்தப்படவுள்ளது.அத்துடன் காணாமலாக்கப்பட்டோருக்கான மற்றும் காணிகளை இழந்தோருக்கு நீதி கிடைக்கும்வகையில் ஐக்கியநாடுகள் சபை அமர்வு இடம்பெற வேண்டுமெனவும் வலியுறுத்தும் வகையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மாநாட்டுக்கான  முன்னாயர்த்த  கலந்துரையாடலில் நாட்டிலுள்ள பொது அமைப்புக்கள் ,மதகுருமார்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பல்கலை மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்குமாறு  வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments