கால் கிலோ குழந்தை நலமாக உள்ளதாம்!
அங்குள்ள கீயு பல்கலைக்கழகமருத்துவமனையில் கர்ப்பிணிஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக வந்தார். அவரை பரிசோதனை செய்தமருத்துவர்கள் அவரது கருவில்உள்ள குழந்தை போதியவளர்ச்சியடையாமல் இருப்பதுதெரிய வந்தது.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்டில்ஆறு மாத குறைப்பிரசவத்தில்ஆண் குழந்தை ஒன்று அப்பெண்ணுக்கு பிறந்தது. வெறும் 268 கிராம் மட்டுமேஅக்குழந்தை இருந்தது. அதாவதுஇரு உள்ளங்கைகளுக்குள்அடங்கும் வகையில்அக்குழந்தை இருந்தது.இதன் மூலம் அக்குழந்தைஉலகிலேயே மிக குறைந்தஎடையுடன் பிறந்த குழந்தை எனபெயர் பெற்றது.
இதையடுத்து மருத்துவர்கள்அந்த குழந்தைக்கு தீவிரசிகிச்சை அளித்து வந்தனர். அதன் பலனாக 5 மாதங்களில்அக்குழந்தையின் எடை 3 கிலோ200 கிராமாக உயர்ந்தது. தற்போது பிற குழந்தைகளைபோல நலமாக இருக்கும்அக்குழந்தைமருத்துவமனையிலிருந்துவீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Post a Comment