சுந்தர் பிச்சை நமக்கானவர்; ராணுவத்தை தேற்றினார் டிரம்ப்!
சீனாவுக்கு என பிரத்தியோகமாக தணிக்கைகள் கொண்ட தேடுபொறியை கூகுள் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது, இதனை கூகுள் நிறுவனத்தின் தலமை அதிகாரி சுந்தர் பிச்சை மறுத்திருந்தபோதும்,
மீண்டும் அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் " கூகுள், சீனாவுடன் இணைந்து செயல்படுகிறது. இது சீன ராணுவத்துக்கு மறைமுகமாக உதவும் வகையில் உள்ளது." மேலும் "தொழில்துறை நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து செயல்படும்போது கிடைக்கும் மறைமுக பலன்களைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம்" என்று அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் (Joseph Dunford) குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுந்தர் பிச்சையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்க ராணுவத்துக்கு ஆதரவாகத்தான் கூகுள் நிறுவனம் உள்ளதாகவும், சீன ராணுவத்துக்கு அல்ல என்றும் சுந்தர் பிச்சை உறுதியுடன் தெரிவித்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்விஷயத்தில் சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் டொனால்ட் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Post a Comment