ஐ.தே.க பாதீட்டில் தீமை இல்லையாம் - சம்பந்தன்

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா? என் பது குறித்து ஆராய்ந்தே முடிவு செய்வோம். என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் தலைவா் இரா.சம்மந்தன்,

இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா? என கேட்பதை விட வும் தீமைகள் எவையும் இல்லை. என கூறலாம். எனவும் கூறியிருக்கின்றாா். 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐ க்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு, திட்டமான இந்த வரவு செலவுத் திட்டம்,

சாதாரண மக்களைப் பலப்படுத்தவும் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் அனைத்து மக்களினதும் அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக

அரசாங்கம் தெரிவித்தது. இது தொடர்பில் பேசிய சம்பந்தன்,

கடனிலிருந்து நாட்டினை எவ்வாறு மீட்டெடுப்பது, நாட்டின் வருவாயை எவ்வாறு அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து எந்தத் திட்டங்களையும் முன்வைக்காத வரவுசெலவு திட்டத்தையே நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.

அதேபோல் இந்த வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நன்மைகள் உள்ளதா என்பதை கூறுவதை விடவும் தீமைகள் இல்லை என்று கூறலாம். ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து நாம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments