பன்னாட்டு இசைத் தூதராக லிடியன் வரவேண்டும்; ஏ.ஆர்.ரகுமான்!

தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்' ( the world best)என்ற பொழுத்து போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது, இந்த நிகழ்ச்சியில் சென்னையைச்  சேர்ந்த தமிழ் சிறுவன்  லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். இவர் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார்.
முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன் லிடியன், பின்னர் வேகமாக வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அனைவரும் எழுந்து நின்று பாராட்ட, இதை விட தன்னால் பல மடங்கு வேகத்தில் வாசிக்க முடியும் என்று மீண்டும் வாசிக்கத் தொடங்கினார்.
பியானோவில் லிடியன் வேகமாக வசிப்பதை பார்த்த நடுவர்கள் வியப்பில் அழ்ந்தனர். சிறிதும் பிழையில்லாமல், துணிச்சலாகவும் விவேகமாகவும் வாசித்த லிடியனின் காணொ சமூக வலைதளங்களில் பரவி வர, அதனைப் பார்த்த பிரபலங்களும் ஆச்சரியமடைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து பாராட்டினர். பதிவு இணையமும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து நிகழ்ச்சியில் வெற்றி பெற்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாய்நாட்டுக்கு திரும்பிய லிடியன் நாதஸ்வரத்துக்கு  ஏஆர் ரகுமானின் K.M இசைக்கல்லூரி பாராட்டு  விழா ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஓஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் கலந்து கொண்டு சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்து நினைவு சின்னங்களும் வழங்கி சிறுவனின் இசை வெற்றிக்கு மரியாதைப்படுத்தி உரை நிகழ்த்தினார். அங்கு பேசுகையில் இசையின் மந்திரத்தை வெளிபடுத்தியுள்ள லிடியன், சர்வதேச அளவில் இசை தூதராக லிடியன் வரவேண்டும் என்று பாராட்டி மகிழ்ந்தது அனைவரையும் பூரிப்படைய வைத்தது.

No comments