மக்கள் திரளால் அதிர்ந்தது பொள்ளாச்சி!

நட்பாக பழகி பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடும் தண்டனைகள் வழங்க கோரியும் இந்த வழக்கில் தமிழக அரசின் காவல் துறையின் மெத்தனப் போக்கை கண்டித்தும் இன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.இதில் அனைத்து அமைப்புகள் கட்சிகள் மனித சங்கிலியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த அரசிற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்கும் விதமாக பதாகைகளையும் கோரிக்கை அட்டைகளையும் ஏந்தி குழந்தைகள் முதல் பெரியவர் வரை வீர முழக்கம் இட்டனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் இரு கரங்களையும் சங்கிலியால் பிணைத்து நின்றனர் பொள்ளாச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் இந்த மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டனர். எந்த அமைப்பிற்கும் கட்சிக்கும் தொடர்பில்லாத பல நூற்றுக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் இனி இதுபோல் அநியாயம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது ஆகவே இந்த போராட்டத்திற்கு வந்துள்ளோம் என்று கூறினர்.. சமூக அநீதிக்கு எதிராக பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக பொது மக்கள் வீதியில் இறங்கி இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது மக்களின் பங்கேற்பு இருக்கும் போராட்டங்கள் தோற்றதில்லை என்பது வரலாறு அந்த வரலாற்றை மெய்ப்பிக்கும் வகையில் போராட்டத்தில் நிறைவு செய்து முடிக்கும் தருவாயில் உயர் நீதிமன்றம் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அரசு ஆணையில் பெண்ணின் பெயரும் அந்தப் பெண் படித்த கல்லூரியின் பெயரும் இடம் பெற்றிருப்பதை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறியதும் இந்த வழக்கில் நான்கு பேர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய கோவை மாவட்டத்தின் எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதையும் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்களை வீடியோக்களை youtube இல் இருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதும் போராட்டதுக்கு கிடைத்த  மிகப்பெரிய வெற்றியாகும்.

மேலும் இந்தப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் 19ஆம் தேதி பொள்ளாச்சி நகரத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தாமதித்ததும் அதிமுக வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்ததை வன்மையாக கண்டிக்கின்றோம் மேலும் இவ்வழக்கில் சட்டரீதியாகaidwaஎத்தகைய தலையீடுகளை செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளனர்.

No comments