இராணுவத்தின் கொலை:தீர்ப்பு ஏப்ரல் 22?


அச்சுவேலி சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இலங்கை இராணுவத்தினரால் முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தீர்ப்பு ஏப்ரல் 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக சுருக்கமுறையற்ற விசாரணையில் அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்த்தாக வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி தெரிவித்துள்ளார்.இதனையடுத்;தே, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், கட்டளைக்கான திகதியை நிர்ணயித்து அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் 1998ம் ஆண்டில் வீதியில் வைத்து கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்று யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை முடிவடைந்ததால் அதன் மீதான கட்டளையை, ஏப்ரல் 22ஆம் திகதி வழங்குவதாக மன்று அறிவித்து, வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.

1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்டதன் பின்னராக பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் சிறுப்பிட்டி படைமுகாம் முக்கியத்துவம் மிக்கதாக இருந்திருந்தது.

No comments