பொதுஜன பெரமுனவுக்கே ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரச்சினை !


ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு ஒரு ஒழுங்கு முறை காணப்படுவதாகவும், ஏனைய கட்சிகளைப் போன்று ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது தமக்கு ஒரு பிரச்சினையல்ல எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி புதிய ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானித்து நாட்டுக்கு அறிவிக்கும். இந்த முறைமை ஜே.ஆர். ஜெயவர்தனவின் காலம் முதல் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று பொதுஜன பெரமுனவுக்கே ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. யாரை நியமிப்பது என்பதில் அக்கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொருவரை பிரேரிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்னார்.
நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

No comments